உலக செய்திகள்

சீனாவில் பேருந்து- டிரக் நேருக்கு நேர் மோதல்: 18 பேர் பலி, 14 பேர் காயம்

சீனாவில் பேருந்து- டிரக் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 18 பேர் பலியாகினர். #Accident

பெய்ஜிங்,

சீனாவிலுள்ள ஹுனான் மாகாணத்தில் நெடுஞ்சாலையில் பயணிகள் சென்ற பேருந்து மீது லாரி மோதியதில் 18 பேர் பலியாகினர். 14 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- "சீனாவின் ஹூனான் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை பயணிகளுடன் வந்த பேருந்து மீது லாரி மோதியது. இதில் 18 பேர் பலியாகினர்.

இரு வாகனங்கள் பெரும் சேதத்துக்குள்ளாகின. இதில் 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரின் நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது என்று கூறியுள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்