பெய்ஜிங்
புகழ்பெற்ற கார் நிறுவனமான வோல்ஸ்வேகனும் அதன் இரண்டு சீன கூட்டு- தயாரிப்பு நிறுவனங்களும், எரிபொருள் குழாயில் காணப்பட்ட கோளாறால் 1.82 மில்லியன் கார்களை திரும்ப அழைக்க முடிவு செய்துள்ளன.
ஏற்கனவே தவறான மாசு கட்டுப்பாட்டு வசதிகளை கொண்டிருப்பதாக கூறி சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கும் உலகப் புகழ் பெற்ற கார் நிறுவனமான வோல்ஸ்வேகன் தற்போது மீண்டும் புதிய சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது.
வாகனங்களை திரும்ப அழைக்கும் தகவல் அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் காணப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.