உலக செய்திகள்

அமெரிக்கா: சரக்கு விமானம் தரையில் விழுந்து விபத்து - 2 பேர் பலி

அமெரிக்காவில் சரக்கு விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் பெர்பேங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று டிசி-4 என்ற சரக்கு விமானம் புறப்பட்டது. புறப்பட்டு 11 கிலோமீட்டர் தூரம் சென்ற நிலையில் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

ஆற்றங்கரை அருகே விமானம் விழுந்ததில் அதில் தீ பற்றியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை