புளோரிடா,
அமெரிக்காவின் தென்கிழக்கே அமைந்த புளோரிடா மாகாணத்தில் கீ வெஸ்ட் பகுதியருகே சென்று கொண்டிருந்த படகு ஒன்று நேற்று மதியம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் நீரில் மூழ்கி 2 பேர் பலியானார்கள். 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்.
இந்த விபத்தில் காணாமல் போன 10 பேரை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த படகு எந்த வகையை சேர்ந்தது என்பது பற்றியும், படகில் பயணித்தவர்கள் எண்ணிக்கை பற்றியும், எங்கிருந்து வந்தவர்கள் என்பது பற்றியும் உடனடியாக எதுவும் தெரிய வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்றிரவு வரை தேடுதல் பணி தொடர்ந்துள்ளது.