உலக செய்திகள்

கம்போடியா ராணுவ தளத்தில் நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்து: 20 வீரர்கள் பலி

கம்போடிய ராணுவ தளத்தில் வெடிகுண்டு வெடித்ததில் 20 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தினத்தந்தி

நாம் பென்,

கம்போடியா நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கம்போங் ஸ்பியூ மாகாணத்தில் மிகப்பெரிய ராணுவ தளம் அமைந்துள்ளது. இந்த ராணுவ தளத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. அங்கு கரும் புகை மண்டலம் உருவானது. இந்த பயங்கர வெடிவிபத்தில் 20 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

மேற்கூறிய தகவல்களை கம்போடியாவின் பிரதமர் ஹன் மானெட் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்