உலக செய்திகள்

பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 20 பேர் உயிரிழப்பு, அந்நாட்டு செனட் சபை துணை சபாநாயகர் உள்பட பலர் காயம்

பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 20 பேர் உயிரிழந்தனர், அந்நாட்டு செனட் சபை துணை சபாநாயகர் உள்பட பலர் காயம் அடைந்து உள்ளனர்.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் தென் மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தின் மாஸ்டாக் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்ததும் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்து உள்ளது. வெடிகுண்டு தாக்குதலில் பொதுமக்களில் 20 பேர் உயிரிழந்து உள்ளனர், 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர் என அந்நாட்டு மீடியாக்களில் செய்தி வெளியாகி உள்ளன். பாகிஸ்தான் செனட் சபையின் துணை சபாநாயகர் மவுலானா அப்துல் கபூர் கைதேரி குண்டு வெடிப்பில் காயம் அடைந்து உள்ளார், அவரை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என செய்திகள் வெளியிடப்பட்டு உள்ளது.

காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்நாட்டு மீடியாவிற்கு பேட்டியளித்து பேசிஉள்ள கைதேரி, தனக்கு சிறிய அளவிலான காயமே ஏற்பட்டு உள்ளது என கூறிஉள்ளார். குண்டுவெடிப்பில் கைதேரியின் கார் கடும் சேதம் அடைந்து உள்ளது. அவருடைய கார் டிரைவர் உயிரிழந்துவிட்டார். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எந்தஒரு இயக்கமும் பெறுப்பு ஏற்கவில்லை. அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை