உலக செய்திகள்

பாகிஸ்தானில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 பேர் பலி

பாகிஸ்தானில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

இஸ்லமாபாத்,

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் கூழ்தர் பகுதியில் இருந்து லர்கனோ பகுதிக்கு பயணிகளுடன் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் பலியானார்கள். 30 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைகிடமாக உள்ளது. பேருந்து அதிவேகமாகச் சென்று வளைவில் திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் அளவுக்கதிமாக பயணிகள் பயணித்ததாகவும் பேருந்தின் மேற்கூரையில் கூட பயணிகள் பயணித்து வந்துள்ளனர் எனவும் உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. பேருந்தில் பயணித்தவர்கள் கூழ்தர் பகுதியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு சொந்த ஊர் திரும்பியவர்கள் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்