* பாகிஸ்தானில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவராக நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷாபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
* ஆப்கானிஸ்தானில் பராக் மாகாணத்தில் உள்ள சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் 10 பேர் பலியாகினர். அவர்களில் 4 பேர் உளவுத்துறையினர், 6 பேர் போலீசார் ஆவர். இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.
* சிரியா உள்நாட்டுப்போரில் கடந்த ஆண்டு மட்டும் அங்கு 900-க்கும் அதிகமாக அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டு உள்ளனர்.
* அமெரிக்க வெளியுறவு மந்திரி பதவியில் இருந்து ரெக்ஸ் டில்லர்சன் நீக்கப்பட்டு உள்ள நிலையிலும், தென் கொரிய வெளியுறவு மந்திரி காங் கியுங் வாவின் வாஷிங்டன் பயணத்தில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர், அமெரிக்க வெளியுறவு துணை மந்திரி ஜான் சுல்லிவனை சந்தித்து பேசுவார்.
* சிரியாவில் கிழக்கு கூட்டா பகுதியில் உள்ளூர் மக்கள் வெளியேறுவதற்காக மனிதாபிமான பாதை திறக்கப்பட்டதில் இருந்து இதுவரை 300 பேர் அங்கு இருந்து வெளியேறி உள்ளதாக ரஷியா கூறுகிறது.