உலக செய்திகள்

மெக்ஸிகோ : சாலை விபத்தில் 21 பேர் பலி

மெக்ஸிகோவில் நடந்த சாலை விபத்தில் 21 பேர் பலியாகினர்.

கோட்ஸாகொல்கஸ்,

மெக்ஸிகோ நாட்டின் மெக்சிகோ சிட்டி நகரில் இருந்து சியாபஸ் என்ற நகரில் உள்ள கத்தோலிக்க புனித தலத்துக்கு யாத்ரீகர்கள் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த ஒரு மினி டிரக்கும், பேருந்தும் நேருக்குநேர் மோதிக் கொண்டன.

இந்த கோர விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 17 பேர் பலியாகினர். டிரக்கில் இருந்த 2 பேரும் பலியாகினர். காயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மேலும் 2 பேர் பலியாகினர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது. இரு வாகனங்களில் ஒன்றில் பிரேக் செயலிழந்ததே, விபத்துக்கு காரணம் என்று மீட்பு பணியில் ஈடுபட்ட குழு தெரிவித்துள்ளது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை