உலக செய்திகள்

2,500 ஆண்டுகள் பழமையான ‘மம்மி’கள் எகிப்து நாட்டில் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

எகிப்து நாட்டில் கெய்ரோ அருகே 100 பழங்கால சவப்பெட்டிகளை புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். இவை நன்கு வர்ணம் பூசி அலங்கரிக்கப்பட்டுள்ளன.

தினத்தந்தி

கெய்ரோ,

எகிப்து நாட்டில் கெய்ரோ அருகே 100 பழங்கால சவப்பெட்டிகளை புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். இவை நன்கு வர்ணம் பூசி அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இந்த சவப்பெட்டிகளில் பலவற்றில் பதப்படுத்தப்பட்ட மனித உடல்கள் (மம்மிகள்) இருந்தன. இவை 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என தகவல்கள் கூறுகின்றன. கடந்த மாதம் நன்கு பாதுகாக்கப்பட்ட, சீல் வைக்கப்பட்ட 59 மர சவப்பெட்டிகளை கண்டுபிடித்த நிலையில், இப்போது இந்த பழங்கால சவப்பெட்டிகளை புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவற்றை கிசா பிரமிடுகளுக்கு அருகே எகிப்து கட்டும் கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் உள்ளிட்ட 3 அருங்காட்சியகங்களுக்கு கொண்டு சென்று காட்சிக்கு வைக்கப்போவதாக எகிப்து சுற்றுலா, தொல்பொருள் மந்திரி கலீத் எல் அனானி தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, கண்டுபிடிக்கப்பட்டுள்ள மம்மிகள், எகிப்தை ஆட்சி செய்து வந்த டோலமிக் வம்சத்தை சேர்ந்தவர்களுடையதாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை