உலக செய்திகள்

2வதும் பெண் குழந்தை; ஆத்திரத்தில் துப்பாக்கியால் 5 முறை சுட்டு கொன்ற தந்தை: அதிர்ச்சி சம்பவம்

பாகிஸ்தானில் 2வதும் பெண் குழந்தை பிறந்த ஆத்திரத்தில் அதன் தந்தை துப்பாக்கியால் 5 முறை சுட்டு கொன்ற அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டு உள்ளது.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மியான்வாலி மாவட்டத்தில் வசித்து வருபவர் ஷாஜீப். இவருக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து, சமீபத்தில் அவருக்கு 2வது பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தைக்கு பதில் 2வதும் பெண் குழந்தை பிறந்த ஆத்திரத்தில் அவர் இருந்துள்ளார்.

இந்நிலையில், பிறந்து 7 நாட்களேயான பெண் குழந்தையை கொடூர தந்தை ஷாஜீப் துப்பாக்கியால் 5 முறை சுட்டு கொன்றுள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த பெண் குழந்தையின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு