உலக செய்திகள்

மியான்மரில் கடந்த 24 மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

முதலில் பதிவான நிலநடுக்கம் 80 கி.மீ. ஆழத்திலும், அடுத்து பதிவான நிலநடுக்கம் 25 கி.மீ. ஆழத்திலும் மையம் கொண்டிருந்தது.

நைபிடா,

மியான்மரில் இன்று காலை 8.17 மணியளவில், ரிக்டரில் 4.5 அளவிலான நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 100 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் உறுதிப்படுத்தி உள்ளது.

இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் அல்லது உயிரிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் பற்றி உடனடியாக தகவல் வெளிவரவில்லை.

இதேபோன்று இன்று அதிகாலை 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில், 12.26 மணியளவில், ரிக்டரில் 3.2 அளவிலான நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இதன்பின்னர் 12.52 மணியளவில் ரிக்டரில் இதே அளவிலான மற்றொரு நிலநடுக்கம் பதிவானது.

இதில், முதலில் பதிவான நிலநடுக்கம் 80 கி.மீ. ஆழத்திலும், அடுத்து பதிவான நிலநடுக்கம் 25 கி.மீ. ஆழத்திலும் மையம் கொண்டிருந்தது. இதனால், கடந்த 24 மணிநேரத்திற்குள் மியான்மரில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

மியான்மரில் இந்த மாத தொடக்கத்தில், பிப்ரவரி 3-ந்தேதி இரவு 9.04 மணியளவில் ரிக்டரில் 6.0 என்ற அளவிலான நிலநடுக்கம் பதிவானது. இதன்பின்னர் அன்றிரவு 9.21 மணியளவில் ரிக்டரில் 5.3 என்ற அளவில் மற்றொரு நிலநடுக்கம் பதிவாகி இருந்தது.