உலக செய்திகள்

ரஷ்யாவில் மினி பேருந்து தீப்பிடித்து வெடித்ததில் 3 பேர் பலி

ரஷ்யாவில் மினி பேருந்து ஒன்று தீப்பிடித்து வெடித்ததில் 3 பேர் பலியாகி உள்ளனர்.

தினத்தந்தி

ஏகடெரீன்பர்க்,

ரஷ்ய நாட்டில் மேக்னிடோகார்ஸ்க் என்ற நகரில் கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரவடா ஆகிய இரு தெருக்கள் சந்திக்கும் பகுதியில் சென்று கொண்டிருந்த மினி பேருந்து ஒன்றில் தீப்பிடித்து உள்ளது.

அந்த காரில் 3 பேர் பயணம் செய்து உள்ளனர். காரில் 2 வாயு சிலிண்டர்கள் இருந்துள்ளன என கூறப்படுகிறது.

இந்த நிலையில், மினி பேருந்து தீப்பிடித்ததில் அதில் இருந்த வாயு சிலிண்டர்கள் வெடித்துள்ளன. இந்த சம்பவத்தில் அதில் இருந்த 3 பேர் பலியாகி உள்ளனர். இதனை உள்துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.

இந்த சம்பவம் நடந்த பகுதி அருகே கடந்த திங்கட்கிழமை குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 9 பேர் பலியாகினர். 6 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி