உலக செய்திகள்

பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வருகை

பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 59 கோடி ரூபாய் செலவில் 36 ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய 2016-ம் ஆண்டு இந்திய அரசு ஒப்பந்தம் செய்தது.

அந்த ஒப்பந்தத்தின் படி பிரான்சில் இருந்து ஏற்கனவே 20 ரபேல் விமானங்களை இந்தியா பெற்றுள்ளது. 36 ரபேல் போர் விமானங்களும் 2022 ஏப்ரல் மாதத்திற்குள் இந்தியாவிடம் வழங்கப்படும் என்று பிரான்ஸ் டசால்ட் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் நேற்று இந்தியா வந்தடைந்துள்ளது. அந்த விமானங்கள் விமானப்படையுடன் இணைக்கப்பட்டது. இதன் மூலம் இந்திய விமானப்படையில் உள்ள ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வந்துள்ள ரபேல் போர் விமானங்கள் அரியானாவின் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. சீனாவுடனான மோதலை தொடர்ந்து லடாக் எல்லையில் ரபேல் போர் விமானங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி