உலக செய்திகள்

கனடாவில் பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 3 பேர் பலி

கனடாவில் பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 3 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

ஒட்டாவா,

கனடாவின் அல்பெர்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களுக்கு இடையே ஹவ்ஸ் பீக் என்கிற மலை உள்ளது. இது அந்நாட்டின் மிக உயரமான மலைகளில் ஒன்றாகும்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் லாமா, ஹான்ஸ்ஜோர்க் ஆயுர் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஜெஸ் ரோஸ்கெல்லி ஆகிய 3 மலையேற்ற வீரர்கள் ஹவ்ஸ் பீக் மலையில் ஏறும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அவர்கள் 3 பேரும் மலையின் மத்திய பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அங்கு திடீர் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கிய 3 பேரும் பனியில் புதைந்து பலியாகினர்.

மோசமான வானிலை நிலவுவதை அறியாமல் தவறான நேரத்தில் அவர்கள் மலையேறும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஹெலிகாப்டர் மூலம் அவர்களின் உடல்களை மீட்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை