லாகூர்,
பாகிஸ்தானின் லாகூர் நகரில் கட்டப்பட்டு வந்த மசூதியில் தொழிலாளர்கள் பலர் பணியில் ஈடுபட்டு இருந்தனர். கட்டிடத்தின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் கட்டிட இடிபாடுகளுக்கிடையே தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர்.
அவர்களை அருகே இருந்தவர்கள் மீட்க முயன்றனர். எனினும், 3 தொழிலாளர்கள் பலியானார்கள். 11 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
5 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. உயிரிழந்தவர்கள் ஷெரீப் (வயது 40), மன்சூர் (வயது 45) மற்றும் ரியாஸ் (வயது 36) என தெரிய வந்துள்ளது.