உலக செய்திகள்

இமாச்சல பிரதேசத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

இமாச்சல பிரதேசத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டிட இடிபாடுகளில் ராணுவ வீரர்கள் உள்பட 30 -க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

சிம்லா,

இமாச்சல பிரதேசத்தின் தலைநகர் சிம்லாவில் இருந்து 55 கி.மீட்டர் தொலைவில் உள்ள சோலான் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த கட்டிட இடிபாடுகளுக்குள் ராணுவ வீரர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது வரை காயங்களுடன் 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு