உலக செய்திகள்

ரஷிய படைகளுக்கு எதிராக சண்டையிட 3 ஆயிரம் அமெரிக்கர்கள் விருப்பம்

ரஷிய படைகளுக்கு எதிராக சண்டையிட 3 ஆயிரம் அமெரிக்கர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினத்தந்தி

நியூயார்க்,

ரஷியாவின் படையெடுப்பை எதிர்கொள்வதற்காக உக்ரைனின் சர்வதேச பாதுகாப்பு படையில் சேர வெளிநாட்டினருக்கு அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்து வருகிறார்.

அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் அதிகமான தன்னார்வலர்கள் ஜெலன்ஸ்கியின் அழைப்பை ஏற்று ரஷிய படைகளுக்கு எதிராக சண்டையிட விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஈராக், போஸ்னியா ஆகிய நாடுகளில் போர் முனையில் சண்டையிட்ட அனுபவமுடையவர்கள் என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவை தவிர, ஜார்ஜியா மற்றும் பெலாரஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த தன்னார்வலர்களும் உக்ரைனின் சர்வதேச பாதுகாப்பு படையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்