Representation Image (Meta AI) 
உலக செய்திகள்

30 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம்: பிரபல நிறுவனம் எடுத்த முடிவால் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி

முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்து வருவது ஐடி பணியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ஆரக்கிள் (Oracle). இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்ப துறையில் உலகளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இந்த நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் கடந்த ஆண்டு முதல் ஏஐ முதலீடுகளை அதிகரிக்க தொடங்கி உள்ளதது. ஓபன் ஏஐ உள்பட பல நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஏஐ மையங்களுக்கு நிதி ஒதுக்குவதில் சிக்கலை சந்தித்தது.

இதனையடுத்து நிதி பற்றாக்குறையை சமாளிக்க சுமார் 30,000 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்ய ஆரக்கிள் திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாக்யுள்ளது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையின் மூலமாக அந்த நிறுவனத்துக்கு 8 பில்லியன் டாலர் முதல் 10 பில்லியன் டாலர் வரை சேமிக்க முடியும். இந்த தொகையை ஏஐ மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் முதலீடுகளுக்கு பயன்படுத்த முடியும் என்று ஆரக்கிள் கருதுகிறது. ஆரக்கிள் நிறுவன வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கை என்று இது கூறப்படுகிறது.

Also read:மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: 3,979 பணியிடங்கள்..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் சமீபத்தில் 16 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கான நோட்டீஸ் வழங்கியது. ஏஐ பயன்பாடு, பொருளாதார தாக்கம் ஆகியவற்றால் முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்து வருவது ஐடி பணியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.