உலக செய்திகள்

பாகிஸ்தான் சிறையில் 319 இந்தியர்கள்; இந்தியாவிடம் பட்டியல் ஒப்படைப்பு

பாகிஸ்தான் சிறையில் வாடும் 319 இந்தியர்கள் பற்றிய பட்டியலை, அந்த நாடு இந்தியாவிடம் ஒப்படைத்தது.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே இரு தரப்பிலும் தூதரக ரீதியில் கைதிகளை பரஸ்பரம் அணுகுவதற்கு வழிசெய்யும் ஒப்பந்தம் 2008ம் ஆண்டு, மே மாதம் 21ந் தேதி கையெழுத்தாகி உள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளும் பரஸ்பரம் தத்தமது சிறைகளில் வாடும் எதிர்நாட்டு கைதிகளின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ந் தேதியும், ஜூலை 1ந் தேதியும் பரிமாறிக்கொள்ளும் நடைமுறை இருந்து வருகிறது.

இந்த ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் சிறையில் வாடுகிற 270 மீனவர்கள், 49 சிவிலியன்கள் என 319 இந்தியர்கள் பற்றிய பட்டியலை, அந்த நாட்டின் அரசு இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் நேற்று ஒப்படைத்தது.

இதே போன்று இந்திய சிறைகளில் வாடும் 77 மீனவர்கள், 263 சிவிலியன்கள் என 340 பாகிஸ்தானியர் பற்றிய பட்டியலை டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திடம் இந்திய அரசு நேற்று வழங்கியது.

இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகள் இடையேயான உறவில் கடுமையான விரிசல் ஏற்பட்டுள்ளது. அதற்கு மத்தியிலும் ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளும் பரஸ்பரம் கைதிகள் பட்டியலை பரிமாறிக்கொண்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்