உலக செய்திகள்

தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட 3–வது நாடு இந்தியா - அமெரிக்க வெளியுறவுத்துறை ஆய்வில் தகவல்

தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட 3–வது நாடு இந்தியா, என அமெரிக்க வெளியுறவுத்துறை நடத்திய ஆய்வில் தகவல் தெரியவந்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

உலகில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வறிக்கையில் ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு அடுத்தபடியாக தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட 3வது நாடு இந்தியா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டில் இந்தியாவில் 860 தீவிரவாத தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளது என்றும், ஜம்முகாஷ்மீரில் முந்தைய ஆண்டைவிட தீவிரவாத தாக்குதல்கள் 24 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் 2015ம் ஆண்டு வரை தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட 3வது நாடாக பாகிஸ்தான் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்களில் 53 சதவீதம் மாவோயிஸ்டு தீவிரவாதிகளால் நிகழ்த்தப்படுவதாகவும், உலக அளவில் ஐ.எஸ், தலீபான், அல் சபாப் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மாவோயிஸ்டு இயக்கம் 4வது பெரிய தீவிரவாத இயக்கமாக உள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்