உலக செய்திகள்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் புதிய மந்திரி சபையில் இந்திய வம்சாவளியைச்சேர்ந்த 4 பேருக்கு இடம்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் புதிய மந்திரி சபையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் இடம் பெற்றுள்ளனர்.

தினத்தந்தி

ஒட்டவா,

கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற கனடா நாட்டு பொதுத்தேர்தலில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அதிக இடங்களை வென்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.

ஜஸ்டின் ட்ரூடோவின் புதிய மந்திரி சபையில் மொத்தம் 37 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த 37 பேரில், 4 பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்திய வம்சாவளியைச்சேர்ந்த 4 மந்திரிகளில், 3 பேர் சீக்கிய இனத்தைச்சேர்ந்தவர்கள் ஆவர். ஒருவர் அனிதா ஆனந்த் என்ற இந்து பெண் மந்திரியாவார்.

கனடா வரலாற்றில், இந்துப் பெண் ஒருவர் மந்திரி சபையில் இடம் பெறுவது இதுதான் முதல் முறையாகும். அனிதா ஆனந்திற்கு, பொது சேவைகள் மற்றும் கொள்முதல் இலாகாக்கள் வழங்கப்பட்டுள்ளது. பொது பயன்பாட்டுக்கு செலவிடும் பில்லியன் கணக்கினாலான டாலர்களை மேற்பார்வையிடுவது அனிதா ஆனந்திற்கு வழங்கப்பட்ட இலாக்காக்களின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றாகும்.

கனடாவில் கடந்த அக்டோபர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில், ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 157 இடங்களிலும் கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களிலும் வென்றது. 338 இடங்களைக் கொண்ட ஹவுஸ் காமன்சில், பெரும்பான்மைக்கு 170 இடங்களைப் பெற வேண்டும். இதனால், சுதந்திர கட்சிக்கு 13 இடங்கள் குறைவாக உள்ளது.


தேர்தலில் வெற்றி பெற்றாலும் லிபரல் கட்சிக்கு பெரும்பான்மைக்கு கிடைக்கவில்லை எனவே சுயேட்சைகள் மற்றும் சிறு கட்சிகளுடன் இணைந்து லிபரல் கட்சி ஆட்சி அமைத்துள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்