உலக செய்திகள்

மெக்சிகோவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 4 பேர் பலி

மெக்சிகோவின் வடக்கு பகுதியில் சிகுவாகுவா மாகாணத்தில் உள்ள சியுடாட் கவுத்டெமக் நகரில் இருந்து, துராங்கோ மாகாணத்துக்கு சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.

தினத்தந்தி

மெக்சிகோ சிட்டி,

விமானத்தில் உள்ளூர் பாதிரியார் ஒருவர் மற்றும் ஒரு பெண் உள்பட 4 பேர் இருந்தனர். பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் திடீரென விமானத்தின் என்ஜின் செயலிழந்தது. இதனால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் அங்குள்ள விவசாய நிலத்தில் விழுந்து நொறுங்கியது.

இந்த கோரவிபத்தில் விமானத்தில் இருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த விபத்து குறித்து உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்