உலக செய்திகள்

பாகிஸ்தானில் போலீஸ் அதிகாரிகள் 4 பேர் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் போலீஸ் அதிகாரிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கைபர் பக்துங்கா மாகாணத்தில் சமீபகலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்பு போன்ற நாச வேலைகளை பயங்கரவாதிகள் அரங்கேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் கைபர் பக்துங்வா மாகாணத்தில் ஆப்கானிஸ்தானின் எல்லையையொட்டி அமைந்துள்ள லாக்கி மராவத் நகரில் நேற்று காலை போலீஸ் அதிகாரிகள் சிலர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். என்ன நடக்கிறது என போலீசார் சுதாரிப்பதற்குள் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

பயங்கரவாதிகள் சுட்டதில் போலீஸ் அதிகாரிகள் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது