உலக செய்திகள்

அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 42 பேர் பலி

அகதிகள் 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்

தினத்தந்தி

திரிப்பொலி,

பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின் போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த 49 பேர் லிபியாவில் இருந்து படகில் மத்திய தரைக்கடல் வழியாக கடந்த 3ம் தேதி ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோத அகதிகளாக நுழையும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

அகதிகள் பயணித்த படகு லிபியாவின் சொவரா அருகே சென்றபோது திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணித்த அனைவரும் கடலில் மூழ்கினர். இந்த விபத்து தொடர்பாக கடந்த சனிக்கிழமை லிபியா கடற்படைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மீட்புப்பணியில் ஈடுபட்ட வீரர்கள் அகதிகள் 7 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால், இந்த சம்பவத்தில் 42 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்