உலக செய்திகள்

அந்தமான் நிக்கோபார் தீவு அருகே நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவின் கேம்ப்பெல் விரிகுடாவிற்கு வடக்கே 4.3 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

கேம்ப்பெல் விரிகுடா,

அந்தமான் நிக்கோபார் தீவு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவின் கேம்ப்பெல் விரிகுடாவிற்கு வடக்கே 208 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் பூமிகுக்கு அடியில் 75 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டு உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது.

SCROLL FOR NEXT