கடந்த ஆண்டு இந்தியா ஏழைகளின் எண்ணிக்கையில் கடுமையான வீழ்ச்சி கண்டது. ஒவ்வொரு நிமிடத்திலும் 44 இந்தியர்கள் தீவிர வறுமையில் இருந்து வெளி வருகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தற்போதைய போக்குகள் தொடர்ந்தால், இந்த ஆண்டுக்குப் பிறகு இந்தியா 3 வது இடத்திற்கு தள்ளப்படும், காங்கோ ஜனநாயகக் குடியரசு 2 வது இடத்தை பெறுகிறது.
ப்ரூக்கிங்ஸின் 'எதிர்கால வளர்ச்சி' வலைப்பதிவில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வவில் கூறபட்டு இருப்பதாவது:-
2018 மே மாத இறுதியில், நைஜீரியாவில் 8.7 கோடி மக்கள் தீவிர வறுமையில் இருப்பதாக ஆய்வு சுட்டிக்காட்டுகின்றது. இந்தியாவில் 7.3 கோடி மக்கள் உள்ளனர்.
2030 க்குள் உலகளாவிய வறுமையை ஒழிக்க ஐ.நா. ஆதரவுடன் கூடிய வளர்ச்சி இலக்குகள் இலக்கு கொண்டுள்ளன. இந்தியா, இந்தோனேஷியா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், சீனா மற்றும் பாகிஸ்தானில் தனி நபர் வருமானம் அதிகரித்து வருவதால் தெற்காசியா, கிழக்கு ஆசிய மற்றும் பசிபிக் பகுதிகளில் வறுமை குறைப்பு அதிகரித்து வருகிறது என ஆய்வுகள் தெரிவிக்கிறது.
உலகின் மிக மோசமான ஏழைகளில் சுமார் மூன்றில் ஒரு பகுதியினர் ஆப்பிரிக்காவில் உள்ளனர் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
செப்டம்பர் 1, 2017 ல் 64.7 கோடி மக்கள் தீவிர வறுமையில் வாழ்ந்ததாக ஆய்வு குறிப்பிட்டு உள்ளது. ஒவ்வொரு நிமிடமும், 70 பேர் வறுமையிலிருந்து வெளியேறுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2016 ஆம் ஆண்டில் சுமார் 3.6 கோடி மக்கள் தீவிர வறுமையில் இருந்து தப்பித்துள்ளனர்.