உலக செய்திகள்

உக்ரைன் மீது ரஷியா நடத்திய வான்வழி தாக்குதலில் 47 பேர் பலி..!

கடந்த மார்ச் 3-ந்தேதி செர்னிஹிவ் நகரில் ரஷியா நடத்திய வான்வழி தாக்குதலில் 47 பேர் பலியாகி உள்ளனர்.

கிவ்,

ரஷிய ராணுவம் நேற்று முன்தினம் (மார்ச் 3) உக்ரைனின் செர்னிஹிவ் நகரின் குடியிருப்பு பகுதியில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

38 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் என மொத்தம் 47 பேர் ரஷியா நடத்திய வான்வழி தாக்குதலில் உயிரிழந்ததாக அங்குள்ள உள்ளூர் அதிகாரிகள் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

ஒரு வாரத்திற்கு முன்பு ரஷியா உக்ரைன் மீதான தாக்குதலை தொடங்கிய போது குடியிருப்பு பகுதிகளை நாங்கள் குறிவைக்கவில்லை பொது மக்கள் இருக்கும் இடங்களில் நாங்கள் தாக்குதல் நடத்தமாட்டோம் என்று கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை