உலக செய்திகள்

நேபாளத்தில் டாக்சி ஆற்றில் கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி

இந்த விபத்தில் ஒருவர் காணாமல் போனதால் அவரை தேடும் பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

தினத்தந்தி

காத்மாண்டு,

நேபாளத்தின் சித்வான் மாவட்டத்தில் உள்ள திரிசூலி ஆற்றில் டாக்சி கவிழ்ந்ததில் 5 பேர் இறந்தனர் மற்றும் ஒருவர் காணாமல் போன சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த 5 பேர்களில் உடல்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில்,

"காத்மாண்டுவில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்டு விட்டு டிரைவர் உள்பட 6 பேர் டாக்சியில் இன்று காலை வீடு திரும்பி கொண்டிருந்தனர். அந்த டாக்சி சித்வான் மாவட்டத்தில் உள்ள திரிசூலி ஆற்றில் விழுந்தது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் காணாமல் போனதால் அந்த நபரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. உயிரிந்தவர்களில் ஒருவர் டாக்சியின் டிரைவர் என தெரியவந்துள்ளது" என்றார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து