கோப்புப்படம் 
உலக செய்திகள்

துனிசிய கடலில் அகதிகள் சென்ற படகுகள் கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு

துனிசிய கடலில் அகதிகளை ஏற்றிச் சென்ற 3 படகுகள் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

தினத்தந்தி

துனிசியா,

துனிசிய கடலில் அகதிகளை ஏற்றிச் சென்ற 3 படகுகள் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மாயமாகியுள்ளனர்.

துனிசியா நாட்டில் இருந்து இத்தாலிக்கு ஏராளமானோர் திருட்டுத்தனமாக படகுகளில் அகதிகளாக சென்று வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இப்படி அகதிகளாக தப்பி சென்ற போது 3 படகுகள் கடலில் கவிழ்ந்து மூழ்கியது.

இதில் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒரு குழந்தை உள்பட 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் 6 குழந்தைகள் உள்பட 47 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. 73 பேரை கடலோர ரோந்து படையினர் மீட்டதாக துனிசியா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது