கோப்புப்படம் 
உலக செய்திகள்

சிரியாவில் கண்ணி வெடியில் சிக்கி 5 விவசாயிகள் பலி

சிரியாவில் கண்ணி வெடியில் சிக்கி 5 விவசாயிகள் பலியாகினர்.

டமாஸ்கஸ்,

சிரியாவில் ஐ.எஸ். உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவர்கள் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களையும், அப்பாவி பொதுமக்களையும் குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள தாரா மாகாணத்தில் டெய்ர் அல்-அடாஸ் என்கிற கிராமத்தில் கோதுமை அறுவடை செய்யும் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது பயங்கரவாதிகளால் சாலைக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் அந்த பஸ் சிக்கியது. கண்ணி வெடி வெடித்து சிதறியதில் பஸ் உருக்குலைந்துபோனது. இதில் பஸ்சில் இருந்த விவசாயிகள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 30 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...