உலக செய்திகள்

சீனாவில் ரசாயன ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் உயிரிழப்பு

சீனாவில் ரசாயன ஆலையில் பயங்கர நிகழ்ந்த வெடிவிபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

பீஜிங்,

சீனாவின் கிழக்கு லியோனிங் மாகாணம் பான்ஜின் நகரில் ரசாயனங்களை உற்பத்தி செய்யும் ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலையில் நேற்று முன்தினம் தொழிலாளர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் ரசாயன ஆலையில் பயங்கர வெடிவிபத்து நேரிட்டது. இதில் வானுயரத்துக்கு தீப்பிழம்பு எழுந்தது. அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலம் சூழந்தது. மேலும் வெடிவிபத்தை தொடர்ந்து ஆலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கினர்.

இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக இறங்கினர். நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். பின்னர் அவர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். 34 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தில் 8 பேர் இடிபாடுகளில் சிக்கி மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்