காபூல்,
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 3 இடங்களில் நடந்த வெவ்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் 2 ராணுவ வீரர்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை 3 வெவ்வேறு இடங்களில் குண்டு வெடிப்புகள் நடந்ததாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் பெர்டாஸ் பெரமர்ஸ் தெரிவித்தார்.
மேலும் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல்களுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.