உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் சுரங்க தொழிலாளர்கள் 5 பேர் சுட்டு கொலை; மர்ம நபர்கள் அட்டூழியம்

ஆப்கானிஸ்தானில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் 5 பேரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு, கொள்ளையடித்து, கொன்று விட்டு தப்பியோடி உள்ளனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் நடந்து வந்த நீண்டகால போர் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்டில் முடிவுக்கு வந்தது. அமெரிக்க படைகளின் வாபசை தொடர்ந்து, தலீபான் பயங்கரவாதிகளின் கைவசம் ஆட்சி சென்றது.

எனினும், பயங்கரவாத செயல்களில் இருந்து விலகி பொதுமக்களுக்கு உரிய நல்ல ஆட்சியை வழங்குவோம் என தலீபான்கள் கூறி வந்தனர். ஆனால், தலீபான்களுக்கு அஞ்சி அந்நாட்டு மக்களில் பலர் வெளியேறி வருகின்றனர்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தின் எல்லையையொட்டிய சமங்கன் மாகாணத்தில் டாரா-இ-சொப் மாவட்டத்தில் கொத்தல் ரெகி பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அந்த பகுதிக்கு வந்த துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் சிலர் தொழிலாளர்களை மிரட்டி அவர்களது உடைமைகளை கொள்ளையடித்தனர். இதன்பின் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடி விட்டனர்.

இதில் தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் அந்த மாவட்டத்தில் வசித்து வருபவர்கள். இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்க முன்வரவில்லை.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்