நியூயார்க்,
சிலி நாட்டின் ஆரிகா நகரில் இருந்து 72 கி.மீ. தொலைவில் நேற்றிரவு 9.32 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.1 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது.
இந்நிலநடுக்கத்தின் மையம் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் ஏற்பட்ட உயிர்சேதம் உள்ளிட்ட விவரங்கள் வெளிவரவில்லை.