டோக்கியோ,
ஜப்பானின் ஷிமோகிடா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 70 கி.மீ ஆழத்தில் மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியிருக்கிறது. உள்ளூர் நேரப்படி காலை 11.16 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து தகவல் எதுவும் இல்லை. தற்போது வரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.