உலக செய்திகள்

சீனாவில் 52 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்புகள் உறுதி

சீனாவில் 52 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

பீஜிங்,

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா பாதிப்புகள் முதன்முதலில் சீனாவில் கண்டறியப்பட்டது. அதன்பின்பு பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. ஊரடங்கில் முதன்முறையாக தளர்வுகளையும் அந்நாடு அறிவித்தது.

இந்த நிலையில், அந்நாட்டில் மீண்டும் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. இதன்படி, 52 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் 32 பாதிப்புகள் உள்ளூர்வாசிகளிடமும், 20 பாதிப்புகள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கும் ஏற்பட்டு உள்ளன.

32 பேரில் 25 பேர் லையானிங் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். 3 பேர் ஹெனான், 2 பேர் ஹெய்லாங்ஜியாங் மற்றும் ஹெபய், யுன்னான் பகுதியில் தலா ஒருவருக்கும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை