உலக செய்திகள்

பாகிஸ்தானில் போராட்டக்காரர்கள் - போலீஸ் இடையே மோதல் 6 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் இரண்டாவது நாளாக பாதுகாப்பு படையினர் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் நீடித்து வருகிறது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் சட்ட மந்திரி ஜாகித் ஹமீது, தேர்தலின்போது வேட்பாளர்கள் மத அடிப்படையில் செய்து கொள்ள வேண்டிய பிரமாணம் தொடர்பான திருத்தம் ஒன்றை அவசர கதியில் கைவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் பதவி விலகக்கோரி தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த ஒரு வார காலமாக தெஹ்ரிக் இ லபாயிக் ரா ரசூல் அல்லா அமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டு வந்தனர். இதனால் இஸ்லாமாபாத் முடங்கியது.

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. இதில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்காததால் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் அதிருப்தி அடைந்து அரசின்மீது கடும் கண்டனம் தெரிவித்தன. இதன்காரணமாக நேற்று 8 ஆயிரத்து 500 அதிரடிப்படை போலீசாரும், துணை ராணுவத்தினரும் அங்கு விரைந்து அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். அந்தப் பகுதியில் முகாமிட்டிருந்த போராட்டக்காரர்கள் மீது அவர்கள் ரப்பர் குண்டுகளையும், கண்ணீர்ப்புகை குண்டுகளையும் வெடித்து விரட்டியடித்தனர். ஆனால் அவர்கள் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கினர். போராட்டக்காரர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாக அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

பாகிஸ்தானில் ஸ்திரமில்லா சட்டம் ஒழுக்கு பிரச்சனை ஏற்பட்டு உள்ள நிலையில் அந்நாட்டு அரசு ராணுவத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளது. பாகிஸ்தான் ராணுவமும் போராட்டக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கையை எடுக்க அந்நாட்டு அரசுக்கு உதவி அளிப்பதாக காலை கூறிஉள்ளது. இதற்கிடையே பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி அந்நாட்டு ராணுவ மற்றும் உளவுப்பிரிவு தலைவர்களுடன் ஆலோசனையை மேற்கொண்டு உள்ளார். இரண்டாவது நாளாக இன்றும் பாதுகாப்பு படையினர் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் நடைபெற்ற வண்ணமே உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. நேற்று நடைபெற்ற மோதல்களில் 6 பேர் பலியாகி உள்ளனர் என மீடியா தகவல்கள் தெரிவித்து உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு