உலக செய்திகள்

இந்தோனேசியாவில் கொரோனாவுக்கு 640 மருத்துவர்கள் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் கொரோனாவுக்கு இதுவரை 640 மருத்துவர்கள் உயிரிழந்து உள்ளனர் என அந்நாட்டு மருத்துவ கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.

தினத்தந்தி

ஜகர்த்தா,

இந்தோனேசியாவில் கடந்த ஆண்டு மார்ச்சில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், அந்நாட்டின் மருத்துவ கூட்டமைப்பு வெளியிட்டு உள்ள செய்தியில், தொற்று பாதிப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை கொரோனா பாதிப்புக்கு 640 மருத்துவர்கள் உயிரிழந்து உள்ளனர் என அதிர்ச்சி தெரிவித்து உள்ளது.

இவர்களில் 535 பேர் ஆண் மருத்துவர்கள் (83.6 சதவீதம்), 105 பேர் பெண் மருத்துவர்கள் (16.4 சதவீதம்). அவர்களில் 347 பேர் பொது மருத்துவர்கள். 284 பேர் சிறப்பு மருத்துவர்கள் ஆவர்.

அந்நாட்டில் மிக அதிக அளவாக கிழக்கு ஜாவா (140), மத்திய ஜாவா (96), ஜகர்த்தா (94), மேற்கு ஜாவா (94) அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுவரை இந்தோனேசியாவில் 30 லட்சத்து 82 ஆயிரத்து 410 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 80,598 பேர் உயிரிழந்து உள்ளனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை