உலக செய்திகள்

சீனாவில் கத்திக்குத்து தாக்குதலில் 7 பேர் பலி

சீனாவில் கத்திக்குத்து தாக்குதலில் 7 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தனர்.

சீனாவின் ஹூபெய் மாகாணம் உகான் நகரின் புறநகர் பகுதியான காய்டியான் என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு மக்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு கையில் கத்தியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்களை கத்தியால் சரமாரியாக குத்தினார்.

இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. மக்கள் அனைவரும் தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்ள அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினர்.ஆனாலும் அந்த மர்ம நபர் அவர்களை விரட்டி சென்று கண்மூடித்தனமாக கத்தியால் குத்தினார். இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

இதனிடையே இந்த கத்திக்குத்து தாக்குதல் குறித்து தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். போலீசாரை பார்த்ததும் தாக்குதல் நடத்திய அந்த மர்ம நபர் அங்கிருந்த ஒரு பாலத்தின் மீது ஏறி ஆற்றில் குதித்து தப்பினார்.

இந்த கத்திக்குத்து தாக்குதலின் பின்னணி குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வரும் போலீசார் தப்பியோடிய நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...