உலக செய்திகள்

பெரு நாட்டில் விமான விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

பெரு நாட்டில் இலகு ரக விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதில் 2 விமானிகள் உள்பட 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தினத்தந்தி

லிமா,

பெரு நாட்டின் நாஸ்கா நகரில் மரியா ரீச் விமான நிலையத்தில் இருந்து செஸ்னா 207 என்ற இலகு ரக விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. அதில் டச்சு நாட்டை சேர்ந்த 3 சுற்றுலாவாசிகள், சிலி நாட்டை சேர்ந்த 2 சுற்றுலாவாசிகள் மற்றும் பெரு நாட்டை சேர்ந்த 2 விமானிகள் இருந்தனர்.

இந்நிலையில், விமானம் திடீரென விபத்திற்குள்ளானது. விமானம் தரையில் மோதி தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்தில் 7 பேரும் உயிரிழந்து உள்ளனர். இந்த விபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை