உலக செய்திகள்

ரஷிய தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு; உக்ரைன் அறிவிப்பு

உக்ரைன் விமான நிலையம் மீது ரஷிய ஏவுகணை தாக்குதல் நடத்தி வெடிக்கும் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

கீவ்,

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1 லட்சம் படை வீரர்களை குவித்தது.

இந்த நிலையில், போரை தவிர்க்க ரஷியாவிடம் ஐ.நா. அமைப்பு வைத்த வேண்டுகோள் ஒருபுறம் இருக்க, உக்ரைனின் ராணுவ நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி, அந்நாட்டுக்குள் ரஷிய வீரர்கள் நுழைந்துள்ளனர் என புதின் கூறியுள்ளார். உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் எதிரொலியாக, கச்சா எண்ணெய் விலையும் 100 அமெரிக்க டாலராக உயர்ந்து உள்ளது. ரஷிய வீரர்கள் உக்ரைனுக்குள் நுழைந்ததற்கான அறிகுறியாக, கீவ் நகரில் வெடிகுண்டு சத்தம் ஒன்றும் கேட்டுள்ளது. இதன்படி, மரியுபோல் என்ற கிழக்கு துறைமுக நகரில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டுள்ளன. உக்ரைனில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.

உக்ரைன் மீது பல்வேறு எல்லை பகுதிகள் வழியே ஊடுருவி தாக்குதல் நடத்தப்படுகின்றன. இதன்படி, ரஷியா, பெலாரஸ் மற்றும் கிரீமியா எல்லைகள் இதற்கு பயன்படுத்தப்பட்டு உள்ளன என உக்ரைன் எல்லை படை தெரிவித்து உள்ளது.

அதிகாலை 5 மணியளவில், பெலாரஸ் ஆதரவுடன் ரஷிய படைகள், ரஷிய கூட்டமைப்பு மற்றும் பெலாரஸ் குடியரசு நாடுகளுடனான எல்லையில் அமைந்த உக்ரைன் பகுதி மீது தாக்குதல் நடத்தப்பட்டன.

உக்ரைனின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லை பகுதிகளில் ரஷிய கூட்டமைப்பு தொடர்ந்து ஏவுகணைகளை பொழிந்து வருகின்றன. இந்த நிலையில், உக்ரைன் அரசு வெளியிட்டுள்ள செய்தியில், எங்களுடைய நாட்டு குடிமக்களில் 7 பேர் உயிரிழந்து உள்ளனர். 9 பேர் காயம் அடைந்து உள்ளனர் என அறிவித்து உள்ளது.

எனினும், உக்ரைன் ராணுவத்துக்கு எதிராகவே தாக்குதல் நடத்தப்பட்டது என்றும், குடிமக்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றும் ரஷியா சார்பில் உறுதி தெரிவிக்கப்பட்டு உள்ளது என அந்நாட்டில் இருந்து வெளிவரும் ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

உக்ரைனின் இவானோ-பிராங்கிவிஸ்க் நகரில் அமைந்த விமான நிலையம் ஒன்றின் மீது ரஷ்யாவின் ஏவுகணை சென்று தாக்கி, வெடிக்க கூடிய வீடியோவும் வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை