டோக்கியோ
ஜப்பான் கடல் பகுதியில் அமெரிக்காவின் பிட்ஸ் ஜெரால்டு என்ற போர்க்கப்பல் சென்று கொண்டிருந்தது. இது யோகோசுகா பகுதியில் தென் மேற்கில் 56 கடல் மைல் தொலைவில் வந்த போது எதிரே பிலிப்பைன்ஸ் கொடியுடன் ஏசிஎஸ் கிரில்டல் என்ற சரக்கு கப்பல் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த இரு கப்பல்களும் எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த கப்பலில் அமெரிக்க போர்க் கப்பல் கடும் சேதம் அடைந்தது.
கப்பல்கள் மோதிய விபத்தில் அமெரிக்க போர்க் கப்பலில் இருந்த 7 வீரர்கள் மாயமாகிவிட்டனர். அவர்களின் நிலைமை என்ன வென்று தெரியவில்லை. இதற்கிடையே காயம் அடைந்த கமாண்டர் மற்றும் 2 பேர் ஹெலிகாப்டர் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.