உலக செய்திகள்

அமெரிக்காவில் படகு வீடுகளில் தீப்பிடித்து 8 பேர் சாவு

அமெரிக்காவில் படகு வீடுகளில் தீப்பிடித்து விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள ஸ்காட்ஸ்போரோ நகரில் டென்னசி நதி கரையோரம் மரத்திலான படகு வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த படகு வீடுகளில் பொதுமக்கள் பலர் நிரந்தரமாகவும் சிலர் வார இறுதி நாட்களை கழிக்கும் பொருட்டும் வாடகைக்கு தங்கியிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12.40 மணிக்கு இங்குள்ள ஒரு படகு வீட்டில் திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகம் காரணமாக மற்ற படகு வீடுகளுக்கும் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

இந்த விபத்தில் 35 படகு வீடுகள் எரிந்து ஆற்றில் மூழ்கின. அதில் இருந்த குழந்தைகள், பெண்கள் உள்பட 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அதே சமயம் படகு வீடுகளில் இருந்த 7 பேர் ஆற்றில் குதித்து உயிர் தப்பினர். அவர்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

தீவிபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்