உலக செய்திகள்

அமெரிக்காவில் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதி விபத்து - பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு

அமெரிக்காவில் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் பிரவுன்ஸ்வில்லி நகரில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் தாறுமாறாக சாலையில் ஓடியது. பின்னர் சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது மோதியது. இதனால் அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர்.

இந்த விபத்தில் சாலையோரம் நடந்து சென்ற 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. குடிபோதையில் வாலிபர் ஒருவர் வேகமாக கார் ஓட்டியதால் விபத்து நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். காரை ஓட்டிய வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்