அம்மான்,
ஈராக், லிபியா, பாலஸ்தீனம், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் இந்த ஜனவரி மாதத்தில் போரால் 83 குழந்தைகள் பலியாகி உள்ளனர் என ஐ.நா.வுக்கான யூனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. அவர்களில் பெருமளவில் சிரியா நாட்டை சேர்ந்தவர்கள் உள்ளனர்.
ஒவ்வொரு நாளும் குழந்தைகள் கொல்லப்படுவது மற்றும் காயமடைவது என்பது ஏற்று கொள்ள முடியாதது. ஜனவரி ஒரு கறுப்பு மற்றும் ரத்த மாதம். குழந்தைகளை அமைதியாக்கி விடலாம். ஆனால் அவர்கள் குரல் தொடர்ந்து ஒலிக்கும். அவர்களது குரலை அமைதியாக்க முடியாது என அந்த அமைப்பின் மத்திய கிழக்கு மற்றும் வடஆப்பிரிக்க மண்டல இயக்குநர் கீர்ட் கூறியுள்ளார்.