உலக செய்திகள்

கோஸ்டாரிகாவில் பஸ் விபத்து: 9 பேர் பலி

கோஸ்டாரிகாவில் நேற்று முன்தினம் இரவு கனமழையால் ஏற்பட்ட பஸ் விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினத்தந்தி

கோஸ்டாரிகா,

கோஸ்டாரிகா நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் தலைநகர் சான் ஜோஸிலிருந்து 70 கிமீ தொலைவில், நாட்டின் மேற்கில் உள்ள கேம்ப்ரோனெரோ பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலையில் கனமழையால் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 9 பேர் உயிரிழந்ததாகவும் 55 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தீயணைப்புத்துறை மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் கனமழையால் ஏற்பட்ட கடுமையான சேதம் காரணமாக நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட வேண்டியிருந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் கனமழை தொடரும் என்று அந்நாட்டு தேசிய வானிலை ஆய்வு மையம் நேற்று டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

பல குடும்பங்கள் தங்கள் உடைமைகளை இழக்கும் இந்த நிலைமை மிகவும் சோகமானது மற்றும் கவலை அளிக்கிறது என்றும் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கும்படியும் கோஸ்டாரிகா ஜனாதிபதி ரோட்ரிகோ சாவ்ஸ் நேற்று உத்தரவிட்டார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்