டோக்கியோ,
ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் ஹராஜுகு பகுதியில் டகேஷிட்டா என்ற தெருவில் மக்கள் புதுவருட கொண்டாட்டத்திற்காக தயாராகி வந்தனர். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான சர்வதேச சுற்றுலாவாசிகள் இங்கு வருவர். புது வருடத்தினை முன்னிட்டு இந்த சாலையில் கார் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், நள்ளிரவு நெருங்க 10 நிமிடங்கள் இருந்தபொழுது, இவர்கள் மீது கொலை செய்யும் நோக்கமுடன் வாலிபர் ஒருவர் சிறிய கார் ஒன்றில் வந்து மோதியுள்ளார்.
இந்த சம்பவத்தில் 9 பேர் காயமடைந்து உள்ளனர். இதில் கல்லூரி மாணவர் ஒருவர் படுகாயமுற்றார். அவருக்கு அறுவை சிகிச்சை நடந்து வருகிறது.
இந்த விபத்து ஏற்படுத்திய வாலிபர் கஜுஹிரோ குசாகாபே (வயது 21) என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.