உலக செய்திகள்

பாகிஸ்தானில் தொலைக்காட்சி நாடக படப்பிடிப்பில் துப்பாக்கி சூடு: 9 பேர் காயம்

பாகிஸ்தானில் தொலைக்காட்சி நாடக படப்பிடிப்பில் புகுந்து பாதுகாவலர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில் 9 பேர் காயமடைந்தனர்.

தினத்தந்தி

கராச்சி,

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் பங்களா ஒன்றில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நாடகத்திற்கான படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்துள்ளது. அந்த பங்களாவின் காவலர் குல் பாய் என்பவர் நாடக தயாரிப்பாளரிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

இந்நிலையில், வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த பாதுகாவலர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் படப்பிடிப்பில் இருந்தவர்களை நோக்கி சுட்டுள்ளார். இந்த சம்பவத்தில் 9 பேர் காயமடைந்து உள்ளனர்.

அவர்கள் அனைவருக்கும் 22 முதல் 40 வயது இருக்க கூடும். இதனை தொடர்ந்து சம்பவம் பற்றி அறிந்து கராச்சி போலீசார் படப்பிடிப்பு பகுதிக்கு சென்று பாதுகாவலரை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்