உலக செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வீடு அருகே தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்; 9 பேர் பலி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வீடு அருகே நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். #SuicideBlast

தினத்தந்தி

லாஹூர்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் வீடு அருகே சோதனை சாவடிக்கு நெருங்கிய பகுதியில் வெடிகுண்டுகளை கட்டி கொண்டு வந்த தற்கொலை தீவிரவாதி ஒருவன் அவற்றை வெடிக்க செய்துள்ளான்.

இந்த சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 2 ஆய்வாளர்கள் மற்றும் 3 கான்ஸ்டபிள்கள் உள்பட 5 பேர் போலீசார். தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 25 பேர் காயமடைந்தனர். அவர்களில் 14 பேர் போலீசார். 4 போலீசாரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது.

லாஹூர் நகரில் பாகிஸ்தான் சூப்பர் லீக் அரை இறுதி போட்டிகள் நடைபெற ஒரு வாரம் உள்ள நிலையில் தாக்குதல் நடந்துள்ளது. இதில் ஈடுபட்டவன் டீன் ஏஜ் வயது உடையவன் என போலீசார் கூறியுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு தஹ்ரீக் இ தலீபான் தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு